Description
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது. அந்தக் கூற்றையே நவீன முறையில் பாலமுருகன் இக்கதையில் கையாள்கிறார். சாகாக்கலை எனப் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறார். ‘டிஸ்டோபியக்’ கதைகள் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை. அரசின்மைவாதத்தைப் பேசுபவை. இந்த இயல்புகள் பாலமுருகனின் மற்ற கதைகளுக்கும் பொருந்தி வருகின்றன. – சுனில் கிருஷ்ணன்