
தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் போட்டி 2025 – ‘நாவல்கள் பற்றிய ஒரு பொதுவான வாசகப் பார்வை’
இரண்டாவது முறையாக தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நாவல் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியாவில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் நாவல்களை ஒன்றுசேர்த்து வாசிப்பதும் மதிப்பிடுவதும் இப்போட்டியின் வாயிலாக எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.




