
மாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வை
எழுத்தாளர் ஐயா கே.பாலமுருகனும் நாவல் மாயவிடுதியும் ஒரு பார்வை
தமிழ்க்கூறு மலைநாட்டில் மாயவிடுதி (அறிவியல் மர்ம நாவல்) ஓர் அரிய முயற்சியாகும். இந்நூல் நிறையப் பக்கங்களைக் கொண்டதுதான் என்றாலும், வாசித்து முடிக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே எடுத்துக் கொண்டேன்.
மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு வளம்சேர்த்த எழுத்தாளர்களுள் ஐயா கே.பாலமுருகன் முன்னோடி என்பேன். இந்நாட்டில் நீண்டகாலமாக எழுதிவரும் எழுத்தாளர்கள் ஒரு சிலருள் இவரும் ஒருவர். இவர் சிறுவர் நாவல், சிறுகதை, கவிதை, குறுநாவல், சிறுவர்களுக்கான கட்டுரை தொகுப்பு, பயிற்சி நூல் எனப் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு அவற்றில் தம்முடைய தனித்த அடையாளத்தையும் முத்திரையையும் பதித்துள்ளார். மலேசிய நாட்டில் இவரே சிறுவர் நாவலை எழுதி பிள்ளையார் சுழி போட்டவர் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
கோவிட் காலக்கட்டத்தில் சுட்டியுடன் இல்லிருப்புக் கற்றலில் மாணவர்களைக் கவர்ந்திழுத்த சிறந்த ஆசான் என்பேன். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆய்வுகள் என பல மேற்கொண்டு அவற்றில் ஆழமான அறிவும் விரிந்த அனுபவமும் தெளிந்த சிந்தனையும் கொண்டிருப்பவர். இவரின் கற்பனை வளம் ‘out of the book’ ஒவ்வொரு நூலையும் இரங்கோலியாக அலங்கரிக்கும். மேலும் அறிவியல் புனைக்கதைகளின் வழி சிறுகதை தொகுப்பு மற்றும் சமீப காலம் வெளியாகி பீடுநடை போட்டு கொண்டிருக்கும் மாயவிடுதி ஒரு சிறந்த உதாரணம். சிறுவர் மட்டுமின்றி பெரியோரின் உணர்வுக்கு விருந்தாகும் சுவையான, விறுவிறுப்பான மர்மம் திகில் நிறைந்த ஒரு கதையோடு வாசகரின் அறிவுக்கு விருந்தாகும் வகையில் இந்நாவலில் ஏராளமாகவே அடங்கியுள்ளன.
📕முகப்பு- வர்ணம் மற்றும் முகப்பிலுள்ள படங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. வசீகரத்தன்மை கொண்டது இந்த முகப்பு .
👧👦🧔🏼♂️👴🏻கதாப்பாத்திரம்- சிறுவர்கள், அப்பா, சீன சிறுமி என மேலும் சில கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றாலும் இந்நாவலில் இந்த கதையை அழகாக வழிநடத்தி மர்மத்தை மேலும் மெருகூட்டுவது என்னமோ இந்த இரண்டு சிறுவர்கள் தான்.தைரியத்தின் மறு உருவம் இவர்கள்! தேடல் இருக்கும் போது தான் பல விடயங்களுக்கு பதில் கிடைக்கும் என்பார்கள், தொடர்ந்து ஆராய்ந்து இவர்கள் கண்டுப்பிடித்தது என்ன?
🔎என்னைக் கவர்ந்தது எது?🖍️
சிறுவயது தொட்டே தேசியப் பண் கேட்டாலும் என் மேனி சிலிர்க்கும், பலமுறை நான் சிந்தித்தது என்னமோ ஒன்று தான்! 30 களில் நான் வாழ்ந்திருப்பேனோ? அந்த கஷ்டத்தை அனுபவித்திருப்பேனோ? பள்ளிப் பருவத்தில் வரலாறு பாடம் என்னுடைய அலாதி! அந்த அளவு அந்த ஆட்சிக்காலம் தொடர்பான தலைப்புகள் என்னை வெகுவாக வருடியுள்ளது! உள்ளம் பதறும், மக்களின் துயரத்தைக் கண்டு! மீண்டும் என் கண்களைக் குளமாக்கியது இந்த நாவல். என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா! இம்மர்மத்தை அவிழ்க்க வேண்டாம் என்று மட்டுமே நினைக்கிறேன். இம்மர்மத்தை தெரிய கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள்! தமிழ்படம் பார்க்கும் போது நாமும் பல வேளைகளில் கதாநாயகன் கதாநாயகி வில்லனாகி விடுவோம் அல்லவா, அதே போல் இந்நாவலில் முழுமையாக என்னை ஈடுபடுத்தி நானும் பாகமேற்று நடித்தேன் எனலாம்! பல மர்ம இடங்களில் நான் பயந்தேன், வியந்தேன் சில இடங்களில் பயந்து பின்னோக்கி ஓடலாமா என்றெல்லாம் தோன்றியது! ஒரு சில மாமனிதர்களின் வருகை என் கண்களை ஈரமாக்கியது. யார் அவர்கள்???? ஆவலை மேலும் தூண்டும் என நினைக்கிறேன்! என்னுள் வரலாறு பேசியது! அந்த நொடியில் நாவலை தான் படித்து கொண்டிருக்கிறேன் என அறியாமல் போனேன்! கற்பனையிலே இந்நாவல் என்னை தூரப் பயணத்திற்கு அழைத்துச் சென்று பல அம்சங்களை காட்டச் செய்தது! கற்பனையாலும் நிஜத்துக்கு அழைத்து செல்லும் உணர்வை ஓர் எழுத்தாளனால் மட்டுமே வழங்க முடியும். நாவலாசிரியருக்கு வாழ்த்துகள்💐
தொடரும் 🔥
குமரகுரு, ஜொகூர்